The liver is located under the ribs on the right hand side of the body. It lies just below the lungs,The liver has multiple functions,it breaks down and detoxifies substances in the body,The liver is also stores vitamins
Heart Kidney Uterus Ovaries Spleen Lung Pancreas Colon Small Intestine Skin Constipation Herbs Identification and Purification Food Restriction Herbs usage External Herbs Usage Internal Juice Therapy Online Progarms Home Remediesவீட்டு மருந்து 1:
திரிபலா கஷாயம்
தேவையானப் பொருள்கள் :
கடுக்காய்த் தோல்=100 கிராம்.
நெல்லி வற்றல்=100 கிராம்.
தன்றிக்காய் தோல்=100 கிராம்.
செய்முறை:
எல்லாவற்றையும் சுத்தப் படுத்தி,வெயிலில் காய வைத்து,இடித்து,பொடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200 மி.லி நீரில் கலந்து அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்து மருந்துகளை வடிக்கட்டிச் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும்.காலையிலும் இதே போல் ஊறவைத்து மாலையில் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
காமாலை,ஈரல் வீக்கம் போன்ற நோய்கள் குறையும்.
வீட்டு மருந்து 2:
அன்னாசிப் பழத்தில் இருந்து பிழிந்த சாறை ஒரு நாளைக்கு இரண்டு,மூன்று தடவை 100 மி.லி வீதம் குடித்து வந்தால் ஈரல் நோயின் வீரியம் குறையும்.
வீட்டு மருந்து 3:
முள்ளங்கி வேகவைத்த சாறை வேளைக்கு 25 மி.லி ஆக ஒரு நாளைக்கு 2 வேளை குடிப்பதால் வலப்பாட்டு மற்றும் இடப்பாட்டு ஈரல் வீக்கம்,ஈரல் கட்டி முதலியவை குறையும்.
இன்னும் பல மருத்துவ குறிப்புகளை மேலே உள்ள ஆடியோ மற்றும் வீடியோ க்களின் வழி அறிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.
பீட்ரூட், காரட்: நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.
இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.
மாதுளங்கனி: கல்லீரல் நோய்களை குணமாக்கும் கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும், கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது
குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர் களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் துளசி தடுக்கும்.
நெல்லிக்காய்
வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.
அதிமதுரம்
சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.
மஞ்சள்
தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.
ஆளி விதைகள்
இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளிப் பழம்
கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.
கீரை மற்றும் கேரட் சாறு
அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.
அவகேடோ மற்றும் வால்நட்ஸ்
கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்
ஆப்பிள், காய்கறிகள்
கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.
சிகரெட், ஆல்கஹால் வேண்டாம்
மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
ஃப்ளூரைடு வேண்டாம்
ஃப்ளூரைடு கலக்காத நீரை தினமும் 12 டம்ளர் வரை அருந்துவது, கல்லீரலுக்கு நல்லது.
ஃப்ளூரைட் சேர்க்கப்பட்ட பற்பசைகளை தவிர்ப்பது நல்லது
உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
க்ரீன் டீ
இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
நெருஞ்சில் விதை (Milk Thistle Seeds)
நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது.