The liver is located under the ribs on the right hand side of the body. It lies just below the lungs,The liver has multiple functions,it breaks down and detoxifies substances in the body,The liver is also stores vitamins
Heart Kidney Uterus Ovaries Spleen Lung Pancreas Colon Small Intestine Skin Constipation Herbs Identification and Purification Food Restriction Herbs usage External Herbs Usage Internal Juice Therapy Online Progarms Home Remediesஇந்த பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் தங்கிவிட்டு, செரிமானத்துக்கு உதவ முன்சிறுகுடலுக்குப் போகிறது. உடலின் தேவைக்கேற்ப தினமும் அரை லிட்டர் வரை பித்தநீரைச் சுரக்கிறது, கல்லீரல். உலகில் உள்ள எல்லா நிபுணர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தாலும் உருவாக்க முடியாத ஓர் ஆச்சர்யமான ‘கெமிக்கல் ஃபேக்டரி’ இது.
உடலுக்கு தேவையான வெப்பத்தை கல்லீரல் உற்பத்தி செய்கிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுகளுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டியபொருட்களையும் உற்பத்தி செய்கிறது.இரும்புச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின்ஏ ஆகியவற்றை சேமித்து வைத்துக்கொள்கிறது. நோய்த் தொற்றுதலை எதிர்த்து போர் புரிகின்ற ஆன்டிபாடிகளைஉருவாக்குகிறது. இவ்வாறு உடலுக்கு ஊக்கமும், செயல் வேகமும், கொடுக்கிறது கல்லீரல்.
சிறியதும் பெரியதுமாக அனுதினமும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட காரியங்களைச் செய்கிறது. இத்தனை செயல்களுக்கும் கல்லீரல் நடத்தும் ரசாயன மாற்றங்களை வெளியில் செய்து காட்ட விரும்பினால், இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய ரசாயனத் தொழிற்சாலையே கட்ட வேண்டியிருக்கும். அப்படியும்கூட கல்லீரல் செய்யும் சில உள் பரிமாற்றங்களை வெளியில் செய்துகாட்ட முடியாது.