இரத்த பித்தம் என்று சொல்லக்கூடிய(Blood pressure) பித்தத்தினால் ஏற்படக்கூடிய ஒரு நோய். சிலருக்கு இரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் ரத்தத்தின் அளவு மேலேறியும் கீழே இறங்கியும் சரியான அளவு காட்டாமல் இருக்கும்.

 

  • கொத்தமல்லி 30 கிராம்
  • மிளகு 30 கிராம்
  • சிலோன் பட்டை 30 கிராம்
  • சிவப்பு சுக்கு 30 கிராம்
  • கற்கண்டு 60 கிராம்

 

  • கற்கண்டை தனியே பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்
  • கொத்தமல்லி, மிளகு, சிலோன் பட்டை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்து வைக்கவும்
  • சுக்கின் தோலை நன்கு சீவி
  • பாலில் சுத்தி செய்து எடுத்து வைக்கவும்
  • பின்பு சுக்கை நன்றாக இடித்து பொடி செய்து சலித்து அதில் 30 கிராம் எடுத்து வைக்கவும்
  • வறுத்த மூலிகைகளும் சம்பா சரக்குகளையும் தனித்தனியே பொடித்து சலித்து மேற்குறிப்பிட்ட அளவு எடுத்து வைக்கவும்
  • கொத்தமல்லி சூரணம், மிளகு சூரணம் சிலோன் பட்டை சூரணம் ஆகியவற்றை கற்கண்றோடு சேர்த்து ஒன்றாக கலந்து காற்று போகாத புட்டியில் போட்டு மூடி வைக்கவும்
  • தினமும் இரண்டு வேளை இரு கிராம் வாயில் போட்டு வெந்நீர் குடிக்கவும் குடிக்கவும்.

 

பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்தே இது.