Why it is important to restrict some food for some particular disease?
Herbs usage External Herbs Usage Internal Juice Therapy Online Progarms Home Remediesபுற்றுநோய்க்கும் , வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கும் சாப்பிட கூடாத உணவு வகைகள்
( FOODS NOT TO BE TAKEN FOR CANCER AND TUMOURS )
1. குளிர்ந்த நீர் - குடல் பிடிப்பை உண்டாக்கும் ஆதலால் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் . வெது வெதுப்பான நீரில் குளியல் செய்வது நல்லது.
2. வெதுப்பகம் உணவுகள் ( Bakery Items ) - வெதுப்பகத்தில் உருவாக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது .
Bakery items is not recommended for this problem .
Bakery items are not listed under our Traditional Food .
3. பட்டை தீட்டிய உணவுகளை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது . வெள்ளையாக ‘polish’ செய்த உணவுகள் பட்டை தீட்டிய உணவுகள் என்று சொல்வோம் .
உதாரணத்திற்கு : வெள்ளை உப்பு , வெள்ளை சீனி , வெள்ளை அரிசி .
4. மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்களை மட்டுமே உணவுக்கும் , சமையலுக்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும் .
5. சுவையூட்டிகள் ( Sauces ) போன்ற உணவுகளை அதிக சுவைக்காக சேர்க்க கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும் .
6. சுவையூட்டப்பட்ட பானங்கள் ( Acrated cool drink which content only sugar ) - இயற்கை அல்லாத பழச்சாறுகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும் .
7. அமிலத்தன்மையான உணவுகள் , நெஞ்செரிச்சல் கொடுக்கக் கூடிய உணவுகள் ( Acidic Food ) சாப்பிட கூடாது .
8. நிறமூட்டிகள் ( Food Colouring ) உணவில் சேர்க்கவே கூடாது.
9. மணமூட்டிகள் ( Food Additives ) - செயற்கையான மணமூட்டிகள் உணவில் சேர்க்க கூடாது.
10. துரித உணவுகள் ( Fast Food ) - துரித உணவுகளை நிறுத்தி விட வேண்டும் .
11. செயற்கை இனிப்பு ( Sugar Free ) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் .