மது , ரசாயன மருந்துகள் அதிகமாக உட்கொள்ளல், இரவு 11.00 மணியில் இருந்து 3.00 வரை தூங்காமல் இருத்தல், முறையற்ற உணவு பழக்கம் ஆகியவை கல்லீரலை பாதிக்கும் காரணிகள்.

நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு மூன்று காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.

குடிப் பழக்கம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்.
அளவுக்கு அதிகமான மருந்து உட்கொள்ளல்.
அளவிற்கு அதிகமாக குடிப்பதனால் கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.

மற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease – NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.

இந்த இரண்டாவது வகை – அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது – ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.

முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, மது குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.