வாயில் கசப்புச் சுவை,ருசியின்மை,வாயில் நீர் ஊறல்,பசியில்லாமை,உண்ட உணவு செரியாமை,காலையில் பித்தவாந்தி,முகத்தில் தேஜஸ் குறைதல்,முகம் வற்றி, எலும்புகள் தெரிதல்,வயிறு பெருத்து,கை கால் மெலிந்து போதல்,காய்ச்சல் இருத்தல் போன்ற குறிகள் தென்படும்.
கல்லீரலில் நோய்களுக்கான மருந்துகள்மனிதனுடைய உடல் அமைப்புகளில் அற்புதமான செயலை செய்வது ஈரல்.சுரப்பிகளிலேயே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது.இந்த ஈரலானது இருதயம்,சிறுநீரகம்,இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்துக் கொண்டே இருக்கிறது.இந்த செயல் திறனைக் குறைக்கும்படி பலவித நோய்களாலும்,கிருமித் தொற்றுகளினாலும் ஈரல் வீக்கம் அல்லது ஈரல் சுருங்கிப் போதல்,காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் உண்டாகின்றது.
அறிகுறிகள்:
வாயில் கசப்புச் சுவை,ருசியின்மை,வாயில் நீர் ஊறல்,பசியில்லாமை,உண்ட உணவு செரியாமை,காலையில் பித்தவாந்தி,முகத்தில் தேஜஸ் குறைதல்,முகம் வற்றி, எலும்புகள் தெரிதல்,வயிறு பெருத்து,கை கால் மெலிந்து போதல்,காய்ச்சல் இருத்தல் போன்ற குறிகள் தென்படும்.
1.வாய்வு கல்லீரல் நோய்:
வாய்வானது சீர்கோடடைந்து,வாய்வு தோஷம் உபரியாகி,உஷ்ணம்,காய்ச்சல் உண்டாகி சிறுகச் சிறுக உடம்பு இளைத்தல்,வயிறு பெருத்து,ரசத்தாது கேடு அடைந்து,நாளங்களின் முடிச்சுகளில் கட்டி போன்ற முடிச்சுகள் ஏற்படும்.
2.பித்தக் கல்லீரல் நோய்:
இரத்தத்தை கெடுத்து,பித்தத்தின் தன்மை அதிகரிக்கச் செய்து உடல் முழுவதும் பித்தநீர் பரவச் செய்து காண்பதற்கு மஞ்சளாகத் தோற்றம் அளிக்கும்.வாயில் கசப்பு ஏற்பட்டு பித்த வாந்தி எடுத்தல்,முகம் வெளிறிக் காணும்.
3.கபத்தினால் உண்டாகும் ஈரல் நோய்:
இந்நோய் சரீரத்திற்கு வன்மையும்,தெம்பும் கொடுக்கக் கூடிய உஷ்ணத்தை கேடடையச் செய்து,அத்துடன் குளிர்ச்சியான கபம் கலந்து,கல்லீரலையும் கெடுத்து விடுகிறது.உடல் வீங்கி வெளுத்து வயிற்றைப் பெருக்கச் செய்யும்.
வாய் துர்நாற்றம்
கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்
கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமானப் பிரச்சனை
கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.
வெளுத்த தோல் உடம்பு
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.
அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
வாய் கசப்பு
கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
வயிறு வீக்கம்
கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.