கட்டிகள் உடைய எளிய மருத்துவம்

தேவைப்படும் பொருட்கள்

அரிசி மாவையும் மஞ்சள் பொடியையும் விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்து களியாக்கி கட்டி மேல் வைத்து துணியால் கட்ட கட்டி உடைந்து விடும்

வேறு முறை

பாதாள மூலியின் பூவெடுத்து அம்மியில் வைத்து அரைத்து கட்டியின் மீது தடவ கட்டி உடைந்து விடும் ஒரே வேளையில் குணம் காணலாம்.

பாதாள மூலிகை என்பது கள்ளி

kalli

 

 

தேவைப்படும் பொருட்கள்

  • புங்க வேர் - 40 கிராம்
  • சிற்றாமணுக்கு வேர் - 40 கிராம்
  • சங்கன் வேர் வகைக்கு - 40 கிராம்
  • கடுகு ரோகினி - 10 கிராம்
  • வாதமடக்கி வேர்ப் பட்டை - 20 கிராம்
  • பூண்டுச்சாறு - அரை லிட்டர்
  • விளக்கெண்ணெய் - 2 லிட்டர்

செய்முறை

விளக்கெண்ணெய் மற்றும் பூண்டு சாறு இவைகளை ஒன்றாக கலந்து அதில் மீதமுள்ள சரக்குகளை இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு

காலை மட்டும் 1 தேக்கரண்டி உணவுக்குப் பிறகு கொடுக்க வேண்டும்

தீரும் வியாதிகள்

எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, தோல் சிவத்தல், தோல் வீக்கம், நமைச்சல் மற்றும் வறட்சி, பக்கு உதிர்வு, செதில் செதிலாக மாறுதல், கொப்புளம், வெடிப்பு விடுதல், கசிதல் அல்லது இரத்தம் வருதல் புண், புரைகளும் தீரும்.