How to use single herbal with all health problems?
Juice Therapy Online Progarms Home Remediesநீராகாரம் செய்வது எப்படி?
மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ பழைய சோறு கிடக்கட்டும், சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.
பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது
அரிசியை நன்றாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின் அதனுடன் இரு கப் நீர்விட்டு சிறுதீயில் வேகவைக்கவும்.
நன்கு வெந்துபோன சாதத்தை எடுத்து ஆறவிட்டு பின் கொஞ்சம் நீர்விட்டு மூடிவைக்கவும். இரவில் இதுபோல் செய்து கொள்ளவும்.
காலையில் எழுந்து சோற்று பானையில் மேலும் நீர்விட்டு நன்கு கரைத்து, உப்பு சேர்த்து பருகவும்.
காலை வெறும் வயிற்றில் இந்த நீராகாரம் அருந்த பல வியாதிகள் கட்டுப்படும். உடல் பலப்படும்.
மல்லி தண்ணீர் எவ்வாறு செய்வது?
சீரக தண்ணீர் செய்வது எப்படி?
எவ்வாறு நெல்லிக்காய் சாறு எடுப்பது?