Stamina      Infertility      Hair Care      Facial Care

When it comes to face care,men have traditionally kept it simple.Face for both men and women.However,there are some differences between men and womens face that are worth noting.

     Nerve Weakness

Alopecia areata is a type of hair loss that occurs when your immune system mistakenly attacks hair follicles , which is where hair growth begins. The damage to the follicle is usually not permanent. Experts do not know why the immune system attacks the follicles. Dr.Agasthia Rathy says....Alopecia areata usually begins when clumps of hair fall out, resulting in totally smooth, round hairless patches on the scalp or other areas of the body. In some cases the hair may become thinner without noticeable patches of baldness, or it may grow and break off, leaving short stubs (called "exclamation point" hair). In rare cases, complete loss of scalp hair and body hair occurs. The hair loss often comes and goes-hair will grow back over several months in one area but will fall out in another area.

மருத்துவர் அஹஸ்திய ரதி அம்மா சொல்வது என்னவென்றால்....புழு வெட்டு எனப்படும் அலோபீசியா ஏரியேட்டா – Alopecia Areata (அரேட்டா – அரியேட்டா) முடி வேர்காலில் ஏற்படும் நோய் எதிர்ப்புதிறன் குறைபாட்டால் வருவதாகும். 

இது பொதுவாக தலையில் ஏற்படும். தாடி மீசையையும் தாக்கலாம்.

இது பொதுவாக வட்டவடிவமாக பூச்சி அரித்தது  போல காணப்படுவதால் புழுவெட்டு எனப்படுகிறது ( உண்மையிலேயே புழுவிற்க்கும் புழு வெட்டிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை) பூஞ்சை நோய் தொற்றால் (Fungal Infection) ஏற்படும் படர்தாமரை நோயும் ( டீனியா கேப்பிடிஸ் - Tinea capitis) புழுவெட்டும் (Alopecia Areata)ஒன்றுபோல் தோன்றும் ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல – அனுபவம் வாய்ந்த மருத்துவரால் இவற்றை வேறுபடுத்தி காண முடியும்.

லோபீசியா பார்சியாலிஸ் (Alopecia Partialis) – பாதி பகுதியாக முடி கொட்டுவது.

அலோபீசியா பார்பே (Alopecia Barbae) – தாடியிலோ மீசையிலோ ஏற்படும் புழு வெட்டு.

அலோபீசியா டோட்டாலிஸ்(Alopecia Totalis) –தலையிலோ, மீசையிலோ தாடியிலோ முழுவதுமாக முடி உதிர்ந்து போகுதல்.

அலோபீசியா ஒபியாசிஸ்(Alopecia Ophiasis) –தலையின் பின்புறமிருந்தோ, காதின் ஓரத்திலிருந்தோ முடி உதிர்தல்.

அலோபீசியா டிப்யூஸா(Alopecia Diffusa) – பரவலாக முடி உதிர்தல்.

அலோபீசியா யுனிவர்சாலிஸ்(Alopecia Universalis) –உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.

அறிகுறிகள்

Ø  சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வட்ட வடிவமாக காணப்படும்.

Ø  சிலருக்கு சரி பாதி அளவு முடி உதிர்ந்து காணப்படும்.

Ø  சிலருக்கு பரவலாக முடி உதிரும், ஆனால் வழுக்கையாக காணப்படாது.

Ø  ஒருசிலருக்கு புழுவெட்டில் அரிப்புடன் கூடிய பொடுகும் காணப்படும் (Psoriatic Alopecia Areata).

கவனிக்க

1. இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த நோயினால் தாக்கப்படலாம்.

2.  சிலருக்கு சில தினங்களில் தானாக முடி வளர்ந்துவிடும். சிலருக்கு முறையான சிகிச்சை எடுத்தால் மட்டுமே முடி வளரும்.

3.  இந்த நோயானது உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

4. ஆனால் சமுதாயத்தில் மற்றவர்கள் முன்பு செல்லும் போது அடுத்தவர் பார்க்கும் விதத்தினால் மன அழுத்தமும் தன்மீது வெறுப்பும் தோன்றும்.

5.இதனால் இவர்கள் விஷேசங்களில் கலந்து கொள்வதையும் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதையும் தவிர்த்து விடுவார்கள்.

6  முறையான சிகிச்சையும் உளவியல் ஆலோசனையும் இவர்களுக்கு நன்கு பலனலிக்கும்.

சிகிச்சை முறைகள்

நவீன மருத்துவ முறையில் ஸ்டீராய்ட் மருந்துகளை மேற்பூச்சாகவும் மாத்திரைகளாவும் பரிந்துரைப்பார்கள் ஊசி மூலமாகவும் செலுத்துவார்கள். ஆனால் ஸ்டீராய்ட் உபயோகிப்பதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

நாட்டு வைத்தியத்தில் நிறைய முறைகளை பரிந்துரைப்பார்கள். வெங்காயம், பூண்டு, துமட்டிக்காய் முதலியவற்றை மேற்பூச்சாக தடவ சொல்வார்கள்,சிலருக்கு இது பலனலிக்களாம். இதன் மூலம் தலையில் புண் கூட ஆகலாம். இந்த முறைகள் அலோபீசியா ஏரியேட்டாவின் அடிப்படை காரணமான நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தாது.

ஹோமியோபதி சிகிச்சை

ஹோமியோபதி மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்புதன்மை அதிகப்படுத்தப்படுவதால் ஹோமியோபதி சிகிச்சை அலோபீசியா ஏரியேட்டாவிற்க்கு சிறந்த பலனலிக்கும்.