sfafa
இது உடல்சூட்டினை குறைப்பதோடு, முடிஉதிர்வதையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, தலையில் பூசி மீண்டும் ஊறவைத்து குளித்துவர, உடல்சூடு நன்றாக குறையும், கண்களில் எரிச்சல் தீரும், மூளைசூடு குறையும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு காணப்படும் அடிவயிற்றுவலிக்கு வெந்தயம் நிச்சயமாக தீர்வு தரும். காரணம் இதற்கு இசிவகற்றி (Anti spasmodic) செய்கை உள்ளது. மாதவிடாய் ஏற்படும் 5 நாட்களுக்கு முன்பாகவே வெந்தயபொடியையோ, வெந்தயகளியையோ, வெந்தயதோசையையோ, வெந்தய குழம்பையோ சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
உடலுக்கு ஆற்றலையும், சக்தியையும் கொடுக்கும் இரும்புசத்துக்கு மூலாதாரமாக இருப்பதே இதன் தனித்துவம். பூப்பெய்திய பெண்களுக்கு இன்றளவும் வெந்தயக்களி கொடுப்பது வழக்கில் உள்ளது. வெந்தயத்தில் உள்ள டயாஜினின் என்னும் சத்து கருப்பையினை வலுவாக்கி, ஹார்மோன்களை சீராக்கும் வல்லமை பெற்றது. மேலும் பூப்பெய்த பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தினையும் கொடுக்கவல்லது.
வறட்டு இருமலை எவ்வாறு குறைப்பது?
தொண்டை செருமலுக்கு அதாவது தொண்டையில் மாட்டிக்கொண்ட சளியால் வரும் பிரச்சனைகளுக்கு, சித்தரத்தை, மிளகு ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் ( https://www.agasthiar.com.my/siddhaproducts/organic-turmeric ) பொடி கால் டீஸ்பூன், சித்தரத்தை அரை துண்டு, அதிமதுரம் ஒரு குச்சி, துளசி ஐந்து இலை, கற்பூரவல்லி இருந்தால் இரண்டு இலை இவை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து சிறுதீயில் அரை மணி நேரம் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் அரை குவளை எடுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்துவர தொண்டை செருமல் மட்டுப்படும்.