What is COVID-19 ?

This is not the formal name for the virus – the International Committee on Taxonomy of Viruses calls it the “severe acute respiratory syndrome coronavirus 2”, or SARS-CoV-2, because it is related to the virus that caused the SARS outbreak in 2003. However, to avoid confusion with SARS the World Health Organitation calls it the covid-19 virus when communicating with the public.

Our Agasthiar teams's definition of a confirmed case of covid-19 is a person shown by laboratory testing to be infected with the virus, irrespective of clinical signs and symptoms. However, some reported case numbers from China have included people with symptoms of covid-19, but without laboratory confirmation.

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்ப வைரஸ்கள். இவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நோயை ஏற்படுத்தும். மனிதர்களைப் பொறுத்தவரையில் பல கொரோனா வைரஸ்கள் சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவாச நோய்த்தொற்று என்னும் போது கொரோனா வைரஸ்கள் சாதாரண சளி முதல் கடுமையான நோய்களாகிய MERS, SARS வரை கூட ஏற்படுத்தலாம். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், கோவிட்-19 ஐ மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது.

கோவிட்-19 என்றால் என்ன?

கோவிட்-19 – இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயின் பெயர். சீனாவின் வூகான் நகரத்தில் இது ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.

 

How does COVID-19 spread ?

Like the flu, COVID-19 can be transmitted from person to person. The scientific evidence confirms that COVID-19 is spread by droplets. This means that when an infected person coughs, sneezes or talks, they may generate droplets containing the virus. These droplets are too large to stay in the air for long, so they quickly settle on surrounding surfaces.

Droplet-spread diseases can be spread by:

  • coughing and sneezing
  • close personal contact
  • contact with an object or surface with viral particles on it and then touching your mouth, nose or eyes.

That is why it is really important to practice good hygiene, regularly wash and thoroughly dry your hands and practice good cough etiquette.

கோவிட்-19 எவ்வாறு பரவுகிறது?

ஏற்கனவே கொரோனா வைரஸ் இருப்பவர்களிடம் இருந்து தான் இந்த நோய் பரவுகிறது. கோவிட் -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது தும்மும் போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை சுவாசம் மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும். இதனால் தான் நோய்வாய்ப் பட்டவரிடமிருந்து 1 மீட்டருக்கு (3 அடி) அதிகமான தூரத்தில் தள்ளி இருக்க வேண்டியது அவசியம்.