படிக்கும் போது ஈஸியா இருக்குது, ஆனால் அடுத்த பாடத்தை படிக்கும் போது பழைய பாடம் மறக்குது எனும் பிள்ளைகளை உடையவரா நீங்க? அப்ப இது உங்களுக்கு தான்.
நமது முன்னேற்றத்துக்கான அனைத்து பரீட்சைகளிலும் நல்ல தேர்வை முன்னெடுக்க அவசியமான வாழ்வியல் முறைகள்.
உணவே மருந்து, மருந்தே உணவு
பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் இயக்கத்திற்கு அடிப்படையானது உணவு என்பதை யாரும் மறுக்க இயலாது. உட்கொள்ளப்படும் உணவானது குடலில் செரித்து அதிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது.
இதனால் மட்டுமே மூளை சரிவர இயங்குகிறது. இன்று வரை உலக உயிரினங்கள் உணவுக்காகவே தமது நாளின் பெரும் பகுதியைச் செலவிடுகின்றன.
சம்பாதிக்கின்றோம், சாப்பிடுவதற்காக.
ஆனால் சரிவர சாப்பிட தெரியாமல் நோயை பரிசாக பெற்று அதற்கான செலவுகளை செய்கிறோம்.
மனிதர்களுக்கிடையிலான மோதல் தொடக்க காலத்தில் உணவுக்காகவே ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிறது சரித்திரம்.
உணவு என்பது இன்று அலங்கரமான பொருளாக மாறிவிட்டது. வெவ்வேறு நாட்டின் உணவு வகைகளுக்கும் விதவிதமான சமையல் வகைகளுக்கும் நமது நாக்கு அடிமையாகி விட்டது.முக்கியமாக இந்த சீன உப்புக்கு முக்கால்வாசி பேர் அடிமையாகிவிட்டோம்.
உணவு என்பது பசிக்காக மட்டுமல்ல; ஆரோக்கியமான எண்ணம், ஆரோக்கியமான உடல் ,மூளையின் செயலாக்கம் ஆகியவற்றைப் பெறுவதற்காகவும் தான்.
அப்படிப்பட்ட உணவு, கலப்படமில்லாத, இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இல்லாததாக பார்த்து வாங்குவதற்கு குதிரை விலை கொடுத்தாக வேண்டும்.
நாம் உண்ணும் உணவு, நம் கலாச்சாரத்திற்கும் நம் மரபணுவிற்கும் ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட உணவே நல்ல சிந்தனையையும் செயலையும் கொடுக்கும். என்றாவது ஒரு நாள் சாப்பிடும் மலாய், சீன மற்றும் மேல் நாட்டு உணவுகளில் பிரச்சனை இல்லை என்பதை அனைத்து மலேஷிய மக்களும் ஒத்துக்கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளோம்.
ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. நம்மில் பலர் உணவில் கவனம் செலுத்துவதே இல்லை. பசித்துப் புசி என்ற முதுமொழி பறந்துபோய்விட்டது.
நேரம் பார்த்து உண்ணும் நிலை உருவாகிவிட்டது. அதுதானே நமக்கு கொடுக்கும் சாப்பாட்டு நேரம்.அதோடு கண்ட நேரத்தில் உண்ணவும் பழகிவிட்டோம்.
கடைகளில் விற்கப்படும் பாஸ்ட் ஃபுட் வகைகளை நாம் நம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதால் அவர்களின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாகவும்,
மந்தமாகவும் அமைவதற்கு நாமே காரணமாகிறோம்.
இதனால் அவர்களால் சரிவரப் படிக்க முடிவதில்லை. நம் பேச்சை கேட்பது இல்லை .சீக்கிரம் களைப்படைந்தும் விடுகிறார்கள்.
தூங்கி கொண்டே இருப்பார்கள்.இது நம் தவறே அன்றி குழந்தைகளின் குற்றம் அல்ல.
இந்த நிலை மாறி நம் முன்னோர்கள் உட்கொண்ட ஆரோக்கியமான, சத்தான உணவுகளையே நாமும் உட்கொள்ள முன்வர வேண்டும். முன்பெல்லாம் கேப்பைக் களி, வரகரிசிச் சோறு, கம்பு தோசை , தேன் கலந்த தினைமாவு போன்ற சிறு தானியங்கள்தான் பெருவாரியான நம்மக்களின் உணவாக இருந்தது.
வரகு, சாமை, கம்பு, சோளம்,தினை, குதிரைவாலி போன்ற தானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கொழுப்புச் சத்து குறையும்.உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். உடல் பருமன் ஏற்பட்டாமல் பாதுகாக்கும். மேலும் இத்தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாது. எளிதில் ஜீரணமடைகிறது.
இவற்றில் குறைந்த அளவே குளுக்கோஸ் இருப்பதால் சர்க்கரை நோய்க்கும் வாய்ப்பு இல்லை. உடலும் தேக்கு மரம் போல் வலுவாக இருக்கும். இன்று நாம் ஏன் விரும்புவது இல்லை? ஒரே காரணம்தான்.சுவையின்மை.
அகஸ்தியர் கூலிம் இன்று அருமையான தீர்வு கொடுத்துள்ளது.
அரிசியே கதி என்றாகிவிட்டது. அதையும் நாம் பாலிஷ் செய்து தவிடு நீக்கி வெறும் சக்கையைத்தான் சாப்பிடுகிறோம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமடைகிறது.
நவீன அறிவியலின் துணைக் கொண்டு நமது பாராம்பரியத்திற்கு சுவையோடு திரும்ப வேண்டும்.
அந்த கால உணவு வகைகளை சமைக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். கால்போன போக்கில் போகாமல்,நன்கு ஆராய்ந்து நம் தாத்தா, பாட்டி நமக்கு வழங்கிச் சென்றுள்ள உணவு வகைகளை மீண்டும் உட்கொள்ள ஆரம்பித்தால், நாம் அனைவரும் உடல்,மன ஆரோக்கியத்தைப் பெற்று சுகமாக வாழ முடியும்
சொல்வது சுலபம் கடைப்பிடிப்பது கடினம் என்று நாம் எண்ணலாம் யாரோ மாறினால் நாம் சந்தோசமாக இருக்க முடியாது நாம் மாறனும். வயதிருக்கும்போது ஓடி ஓடி உழைத்த பணத்தை வயதான பின்பு மருத்துவத்திற்கு செலவு செய்வதைவிட நம் இளமை காலத்திலே நாம் விட்டதை சரியான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.
உணவை மாற்றினால் மட்டுமே , நோயில்லா உலகாக மாற்ற முடியும்.
எவர் ஆரோக்கியமாக இருக்கிறார்களோ , அவர்களுக்கு சிந்தனை தெளிவாக இருக்கும்.
எவருக்கு சிந்தனை தெளிவாக இருக்கிறதோ அவர்கள் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்.
One day 4 times Agasthiar Nutri Booster drink
Morning 4am till 5 am Agasthiar Memory Capsules
After breakfast and after lunch Agasthiar Memory Tonic 10 ml mixed with 10 ml water