Botanical name is Drynaria quercifolia, it helps to Inhibiting osteoclast function, Stimulating osteoblast function. Osteoporosis is a condition where bone mass decreases as your age. Mudavan attukkal may help prevent the condition. Fractures occur when bones break, such as due to trauma, stress, or medical conditions that reduce bone density. This soup can help treat these types of bone injuries.
Bone injury
Bone injury means fracture, also known as a broken bone, is a condition that changes the contour (shape) of the bone. Fractures often occur when there is a high force or impact put on a bone.
People break bones in sports injuries, car accidents, falls, or from osteoporosis (bone weakening due to aging). Although most fractures are caused by trauma, they can be pathologic (caused by an underlying disease such as cancer or severe osteoporosis). There are more than one million “fragility” fractures every year that are due to osteoporosis. Medical care is needed immediately after a bone is fractured.
Increase bone density
Bone density means measurement corresponding to the mineral density of bone, expressed as mineral mass per unit volume of bone and usually assessed by a radiologic scan of the lower spine or hip. Bone density measurements are used to diagnose and monitor osteoporosis and other bone diseases.
Bone density tests are not necessary for people without risk factors for weak bones. Unnecessary testing is more likely to result in superfluous treatment rather than discovery of a true problem.
Ingredient
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
:- என்கிறார் திருமூலர்.
இது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் பாடல்.
நமது உடலில் இருக்கிற உயிர் ஆற்றல் மூலமே நமக்கான வேலைகளை திறம்பட செய்ய முடியும். அந்த உயிர் ஆற்றல் நம் உடலில் தங்கி வேலை செய்வதற்கு நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். அதைதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’ என கூறுகிறார். உடலின் மூலம் உயிரை வளர்த்து அதன் மூலம் சித்தர்கள் மெய்ஞானத்தை அடைய பயன்படுத்திய ஒரு வழிமுறையே காயகல்பம்.
உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை அதிகரிக்கும். உணவின் சத்துக்கள் கிரக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்காது. பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல், தொண்டை கம்மல் உள்ளிட்ட கோளாறுகளும் நீங்கும். பசியைத் தூண்டுவதோடு, உமிழ்நீரையும் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவையும் நீக்கும். ஜீரணம் சரியாக நடந்து உணவு முழுமையாக உறிஞ்சி உட்கிரகிக்கப்பட்டு விட்டாலே நோய் தோன்றாது.
சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தரக்கூடியவை. உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையை நிலைக்கச் செய்யும்.
கடுமையான மூட்டு வலி், இடுப்புவலி, முடக்கு வாதம் நீங்க முடவாட்டுக்கால் கிழங்கு.
சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும்.
வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார் இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.
சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.
முடவாட்டுக்கால் ரசம் 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம்,தசை பிறழ்சி ஆகியன நீங்கும். குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.
கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.
கீல்வாதம், முடக்குவாதம், மூட்டுவாதம், போன்றவற்றை தணிக்கும்;
கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இவற்றை எடுத்து பாருங்கள் உங்கள் உடலில் ஏற்படும் முன்னேற்றத்தை உணர்வீர்கள் அதுவும் குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உருவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements....
எலும்பு அடர்த்திக் குறைவு (Osteopenia) நோயைத் தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீக்கமுறுக்கி, கிருமிநாசினி, உரமாக்கி போன்ற செய்கைகள் இதற்கு உண்டு. நீரிழிவு நோயில் இதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.
உணவாக எப்படி பயன்படுத்தலாம்?
கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து, வாயில் அடக்கிக்கொண்டால் நீண்ட நேரம் தாகத்தைத் தணிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு. தோல் பகுதியை நீக்கிவிட்டு, கிழங்கைப் பயன்படுத்துவதே கிழங்குக்கான சுத்தி முறை.
முடவன் ஆட்டுக்காலின் தோலை நீக்கிவிட்டு, கிழங்கைப் பசைபோல அரைத்துக்கொண்டு, தேவையான அளவு நீர் சேர்த்து, சீரகம், சிறு வெங்காயம், மிளகு, பூண்டு அரைத்துக் கலந்து சூப் செய்து குடிக்கலாம். சைவ ஆட்டுக்கால் சூப் நோய்களை நீக்குவது மட்டுமன்றி, மிகவும் சுவையானதும்கூட.
சூப் மட்டுமின்றி சட்னி, துவையல் என உணவாக முடவன் ஆட்டுக்கால் கிழங்கைப் பயன்படுத்தி வந்தால் நவநாகரிக நோய்கள் நெருங்காது என உறுதியளிக்கின்றனர் மலைவாசிகள்.
தேவைப்படும் பொருட்கள்
செய்முறை
அனைத்தையும் ஒன்றிரண்டாய் இடித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும். சுவையாக இருக்கும்.
பயன்கள்
இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.