நவர அரிசி

நவர அரிசி

      நவர அரிசி அதிக நார்ச்சத்துக் கொண்ட அரிசி. மலத்தை மிருதுவாக்கி வெளியாக்கும்.


      யாருக்கெல்லாம் சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் பிரச்சனை இருக்கிறதோ இது தான் நோய்க்கு மூலக்கர்த்தா என உணர்ந்து உடனடியாக நவர அரிசியை உண்ணுங்கள்.


      நவர அரிசியை அனைத்து நோய்க்கும் தீர்வு தரும் தாய் என்பார்கள். இது கேரள நாட்டு அரிசி. இது கைகுத்தல் அரிசி என்பதால் பலன் அதிகம்.
சிறு குழந்தைக்கு இதை உணவாக தரச் சொல்லி Nutritionist Sandhya Gugani பரிந்துரைக்கிறார். உடல் எடை கூட இது பெரும் உதவி புரியும்.


      நவர அரிசியை பாலுடனும் மூலிகைளுடனும் வேக வைத்து சாப்பிடும் போது antiseptic properties அதிகமாகிறது. உள்ளுக்குள்ளே ஏற்படும் புண்களையும் குணப்படுத்துகிறது.


      உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்ற இதுவே அற்புத அரிசி. நவர அரிசியை super booster என்று சொல்வார்கள். இதற்கு காரணம் அதன் சத்துகள் மட்டுமல்லாமல் குணமாக்கும் தன்மை இதில் அதிகம் உண்டு.


      கருவில் உள்ள குழந்தையின் எடையை கூட்டுவதற்கு நவர பெரிதும் துணை புரிகிறது. ஆறாத புண்களை அதுவும் Internal wounds-களைக் கூட ஆற்றும் வல்லமை படைத்து இருப்பதால் புற்று நோயாளிகள் தாராளமாக இதை சாப்பிடலாம்.


      ஆயுள்வேத வைத்தியர்கள் நவர அரிசியை மாவு போல செய்து psoriasis மற்று தோல் நோய் பிரச்சனைகளுக்கு பற்றிடுவார்கள்.


      மூலிகைகள்; பால் மற்றும் அரிசியின் கலவை joints stiffness-களை சரிப் படுத்தும்.


      எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் Vitamin C இந்த அரிசியினுள் நிறைந்து இருப்பதால் நோய்களின் காப்பாளான் என்றே இதை அழைக்கலாம்.
நவர அரிசி இரண்டு வர்ணத்தில் கிடைக்கும். ஒன்று செற்நிறம் மற்றொன்ரு கருமை நிறம்.


      ஆயுள்வேதத்திலேயே செந்நிறம் நவர அதிக மருத்துவ தன்மையைக் கொண்டது. 60 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர் இது. 600-ஆம் ஆண்டுகளிலேயே பயன்பாட்டில் இருந்த அரிசி இது.


      Vitamin B, minerals என்ற தாதுப் பொருட்களான zinc, iron, protein; complex carbohydrates ஆன நார்ச்சத்து; antioxidants, polyphenols; flavonoids களான tricin; oryzanol மற்றும் pro-anthocyanidin நிறைந்தது. இலகுவாக செரிமானமாகும் சாதம் இது.


      எல்லா வயதினரும் சாப்பிடக் கூடிய அரிசி. எலும்பு மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த நவர அரிசியை சாப்பிடுங்கள். Rheumatoid Arthritis இனிப்பு நீர்; haemorrhoids; தாய்ப் பால் சுரக்க மற்றும் விந்துனுக்கள் குறைவான oiligospermia பிரச்சனைகளுக்கு இது சிறந்த உணவு.


      பசும் பாலோடு சேர்த்து வேகவைத்து சாப்பிடும் நவர அரிசி தாய் பாலை அதிகமாக்கும். Vegetarian- ஆக இருப்பவர்கள் anaemic எனும் இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் வாரம் 4 முறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்.


     6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு processed உணவுகள் வேண்டாம் என நினைப்பவர்கள். சிறிது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நவர சாதத்தை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.


     என் குழந்தை என்ன கொடுத்தாலும் weight போட மாட்டேன் என்கிறான் என புலம்பும் தாயா நீங்கள்? நவர அரிசியை குருணையாக்கி சில மூலிகைகளுடன் கலந்து பால் சேர்த்து கொடுங்கள். பின்பு பாருங்கள் உடல் குறைக்க மருந்துகளைத் தேடுவீர்கள்.


     நவர பால் கஞ்சியோடு அஸ்வகந்தா சேர்த்து சாப்பிட உடல் அசதி காணாமல் போகும்.


     நவர அரிசி மற்றும் தவிட்டு எண்ணெய் உடல் வலிக்கும் cervical spondylosis; paralysis; இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.


கடுமையான மூல பிரச்சனைக்கு கருவேப்பிலை சின்ன வெங்காயம் மற்றும் மோர் சேர்த்த நவர சாதம் சாப்பிடுங்கள்.


     Cancer; fatty liver: kidney stones; இருதய நோய்களுக்கு நவர அரிசியை ஆயுள் வேத வைத்தியத்தில் பயன்படுத்துகிறார்கள். Potassium; calcium மற்றும் magnesium அதிகம் இருப்பதால் இதை தசை பிரச்சனைகளுக்கும் சாப்பிடலாம்.

 

Anti-oxidants
Anti-inflammatory
Anti-viral
Anti-cancer
Anti mutagenic
Immunomoclulatory properties நிறைந்தது